யாழ்ப்பாணம் அச்சுவேலி வைத்தியசாலையில் சிக்சை பெற்ற நபர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,
வைத்தியசாலையின் வைத்தியர், தாதி, ஊழியர்கள் நால்வர் உட்பட்ட ஆறு பேர் தனிமைப்பட்டுள்ளனர்.
குறித்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தினர்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று கடந்தவாரம் வீடு திரும்பியிருந்த நபர் ஒருவர் மீண்டும் நோய் அறிகுறி காணப்பட்ட நிலையில் நேற்று யாழ்ப்பாணம் அச்சுவேலி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றிருக்கின்றார்.
அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி காணப்பட்டமையை அடுத்து நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அவருக்கு சிகிச்சை வழங்கிய அச்சுவேலி வைத்தியசாலை வைத்தியர், தாதி ஊழியர்கள் 04 பேர் என ஆறு பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.