வைத்தியசாலை சென்று திரும்பியவர்களிற்கு நேர்ந்த பரிதாபம்!! ரயில் வந்த வேளை தண்டவாளத்தில் நின்ற கார்; பெண் உட்பட இருவர் பலி

கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில் ஒன்று காருடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொக்கல விமானப்படை தளத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரயில் கடவையின் ஊடாக கார் கவனக்குறைவாக கடக்க முற்பட்ட போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காருக்குள் இருந்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலி பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு ஆணும், பெண்ணும் மருத்துவ சிகிச்சைக்காக சென்றுவிட்டு திரும்பும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த பெண் காரை ஓட்டிவந்த நிலையில், கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த கடுகதி ரயில், கொக்கல பகுதியில் காருடன் மோதி, சுமார் 400 மீட்டர் தூரம் வரை காரை இழுத்துச் சென்றுள்ளது.

கொக்கல விமானப்படை தளத்திற்கு அருகில் ரயிலில் இருந்து காரை தனியாக பிரித்து, உள்ளே சிக்கிக் கொண்டவர்களை அப்பகுதி மக்கள் மீட்டுள்ளனர். எனினும் இருவரும் விபத்தின் காரணமாகவே உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

வைத்தியசாலை சென்று திரும்பியவர்களிற்கு நேர்ந்த பரிதாபம்!! ரயில் வந்த வேளை தண்டவாளத்தில் நின்ற கார்; பெண் உட்பட இருவர் பலி வைத்தியசாலை சென்று திரும்பியவர்களிற்கு நேர்ந்த பரிதாபம்!! ரயில் வந்த வேளை தண்டவாளத்தில் நின்ற கார்; பெண் உட்பட இருவர் பலி வைத்தியசாலை சென்று திரும்பியவர்களிற்கு நேர்ந்த பரிதாபம்!! ரயில் வந்த வேளை தண்டவாளத்தில் நின்ற கார்; பெண் உட்பட இருவர் பலி வைத்தியசாலை சென்று திரும்பியவர்களிற்கு நேர்ந்த பரிதாபம்!! ரயில் வந்த வேளை தண்டவாளத்தில் நின்ற கார்; பெண் உட்பட இருவர் பலி வைத்தியசாலை சென்று திரும்பியவர்களிற்கு நேர்ந்த பரிதாபம்!! ரயில் வந்த வேளை தண்டவாளத்தில் நின்ற கார்; பெண் உட்பட இருவர் பலி வைத்தியசாலை சென்று திரும்பியவர்களிற்கு நேர்ந்த பரிதாபம்!! ரயில் வந்த வேளை தண்டவாளத்தில் நின்ற கார்; பெண் உட்பட இருவர் பலி

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..