வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பியோட்டம்

அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் கைதி ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (ஜன.19) காலை தப்பிச் சென்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போலி அடையாள அட்டைகளை வைத்திருந்த மற்றும் பயன்படுத்திய குற்றச்சாட்டில் திஸ்ஸமஹாராம மற்றும் அநுராதபுரம் நீதிமன்றங்களால் கைது செய்யப்பட்ட கதிர்காமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கைதி கடந்த 9 ஆம் திகதி முதல் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்த 17 ஆம் திகதி தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தங்காலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி நேற்று (19) அதிகாலை 4.30 மணியளவில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..