Home Local news வெள்ள நீரில் மூழ்கி 18 வயது மாணவன் பலி!

வெள்ள நீரில் மூழ்கி 18 வயது மாணவன் பலி!

நிட்டம்புவை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கஹட்டோவிட்ட கிராமத்தில் ஒருவர் வெள்ள நீருக்கு பலியாகி உள்ளார்.

நேற்று பிற்பகல் நடந்த இந்த சம்பவத்தில், 80/a, கஹட்டோவிட்ட, வெயாங்கொட என்ற விலாசத்தைசேர்ந்த, மொஹமட் லுக்மான் ஆக்கீப் அனாம் (18 வயது) என்பவரே இவ்வாறு வெள்ளநீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். இவர் மதுரங்குளி மேர்ஸி லங்கா (Mercy lanka school) என் பாடசாலையின் மாணவரும் ஆவார்.

கஹட்டோவிட்ட மக்கள் கடும் பிரயத்தனப்பட்டு தேடுதல் நடாத்தியதால், ஒரு மணித்தியாலத்தில் மூழ்கியவரின் உடலை மீட்டு எடுத்தனர்.
தற்போது பிரேத பரிசோதனைக்காக அவரது ஜனாஸா வத்துபிட்டிவல வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை நிட்டம்புவை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

இந்தக்கிராமம் அடிக்கடி மழை காரணமாக வெள்ள அபாயத்தை எதிர் நோக்கும் ஒரு பிரதேசம் ஆகும். தற்போதும் சீரற்ற காலநிலை காரணமாக இக்கிராம மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமட்டக்களப்பு- இருதயபுரத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு!
Next articleகிழக்கில் 10,000 ஐ தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை