வெள்ளவாய பொலிஸ் நிலையத்தில் 17 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிக்கு மேற்கொண்ட துரித அன்டிஜென் பரிசோதனையில் இது தெரி ய வந்துள்ளதாக வெள்ளவாய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 04 பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டமையால் துரித அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அனைவரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனால், வெள்ளவாய பொலிஸ் நிலையத்தில் அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களு டன் நெருங்கிய தொடர்பிலிருந்த அனைவருக்கும் இன்று துரித அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்வாறு 96 பேருக்கு மேற்கொண்ட துரித அன்டிஜென் பரிசோதனையில் மேலும் 20 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதில் 13 பேர் வெள்ளவாய பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் என்றும் 07 பேர் குடும்ப உறுப்பினர்கள் என்றும் வெள்ளவாய சுகா தார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
வெள்ளவாய பொலிஸ் நிலையத்தில் இதுவரை 17 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.