வெள்ளவத்த, இரத்தினபுரி நகரம் முற்றாக முடக்கம்

நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதாக இலங்கை பெட்றோலிய கூட்டுத்தாபம் அறிவித்திருந்த நிலையில், கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஒக்டேன் (92) பெட்ரோல் லிட்டர் 338 ரூபாவாகவும், ஒக்டேன் (95) லிட்டருக்கு 373 ரூபாவாகவும், ஒட்டோ டீசல் லிட்டர் 289 ரூபாவாகவும், சூப்பர் டீசல் லிட்டர் 329 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், வெள்ளவத்த மெரைன்டரைவ் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலைத்தில் கூடியிருந்தவர்கள் குழப்பத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான நிலையில் தமக்கு பழைய விலையில் எரிபொருள் வழங்க வேண்டும் என அங்கு கூடியிருந்தவர்கள் கோரிக்கை விடுத்ததுடன், குழப்பத்திலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம் இரவு ஒன்பது மணி முதல் வரிசையில் காத்திருப்பதாகவும் தற்போது திடீரென விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டதுடன், பொலிஸார் வரவழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றதுஇதேவேளை, நாடாளாவிய ரீதியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

வெள்ளவத்த, இரத்தினபுரி நகரம் முற்றாக முடக்கம் வெள்ளவத்த, இரத்தினபுரி நகரம் முற்றாக முடக்கம் வெள்ளவத்த, இரத்தினபுரி நகரம் முற்றாக முடக்கம் வெள்ளவத்த, இரத்தினபுரி நகரம் முற்றாக முடக்கம் வெள்ளவத்த, இரத்தினபுரி நகரம் முற்றாக முடக்கம்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..