வீதிகளில் தேவையின்றி நடமாடியவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை

கோவிட் தொற்று காரணமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவையின்றி வீதிகளில் நடமாடியவர்களுக்கு வவுனியா சுகாதாரப் பிரிவினர் இன்று மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் மூன்று பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 20ஆம் திகதி இரவு 10 மணி முதல் எதிர்வரும் 6ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நாடு முழுவதும் முடக்க நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை மீறிச் செயற்படுபவர்கள் மீது பொலிஸாரும், சுகாதாரப் பிரிவினரும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், வவுனியா நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சுகாதாரப் பிரிவினரும், பொலிஸாரும் இணைந்து விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், வீதியில் நடமாடியவர்களை வழிமறித்து அன்டிஜன் பரிசோதனையும் முன்னெடுத்திருந்தனர்.

வீதிகளில் தேவையின்றி நடமாடியவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை

வவுனியா, பசார் வீதியில் உள்ள பள்ளிவாசல் முன்பாக துவிச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் நடமாடியவர்கள் வழிமறிக்கப்பட்டு 20 பேரிடம் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அதில் மூவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் சுகாதாரப் பிரிவினராலும், பொலிஸாராலும் எச்சரிக்கப்பாட்டு வீடுகளுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..