தமிழ் நட்சத்திரங்களின் படங்களை விமர்சித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது காமெடி நடிகராகியவர் ஆர்ஜே பாலாஜி. சோசியல் மீடியாவில் அதிக ஆர்வம் கொண்டு கருத்துக்களை கூறி வந்தார் பாலாஜி. சமீபத்தில் அவர் இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் படம் மிகபெரியளவில் ஹிட்டானது.
வானொலியில் ஆர்ஜேவாக பணியாற்றி பின் நடிகராக வளர்ந்து இயக்குனராகவும் மாறினார். தற்போது ஹாட் ஸ்டார் தொலைக்காட்சியில் கிரிக்கெட் விமர்சகராக பணியாற்றியும் வருகிறார்.
இந்நிலையில் பாலிவுட்டில் வெற்றிப்பெற்ற பதாய் ஹோ படத்தின் ரீமேக் தமிழில் போனி கபூர் தயாரிப்பில் வீட்ல விசேஷம் என்ற பெயரில் உருவாகியுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாசிவ நாடார் பல்கலைகழகத்தில் நடைபெற்றது.
அங்கு பேசிய ஆர்ஜே பாலாஜி, நான் எப்போது இந்த கல்லூரிக்கு வந்தாலும் ஒரு ரெஸ்க்கில் இரண்டு பெண்கள் ஒரு பையன் உட்கார்ந்திருப்பார்கள். இதை நான் எந்த கல்லூரியிலும் பார்த்ததில்லை.
சிறுவயதில் இருந்தே பெண்களிடம் பேசக்கூடாது என்று பொத்தி பொத்தி வளர்த்ததால் தான் அவர்கள் பெண்களிடம் எப்படி நடந்து கொள்வது தெரியாமல் போய்விடுகிறது. நம் சினிமாவிலும் பெண்களை தவறான புரிதல்களோடு காட்டி இருக்கிறார்கள்.
மன்னன் படத்தில் வேலை செய்யும் பெண்(குஷ்பூ) நல்ல பெண். கம்பெனி நிர்வாகம் செய்யும் பெண்(விஜயசாந்தி) கெட்டப்பெண். மேலும் படையப்பா படத்தில் வெளிநாட்டில் படித்த பெண் (ரம்யா கிருஷ்ணன்) கெட்டப்பெண், வேலைக்காரி நல்லவள் என்று காட்சி படுத்தியிருப்பார்கள்.
எல்லாமே பெண்கள் மேல் பழிப்போடும் உலகம் தான் இது என்று ஆர்ஜே பாலாஜி கூறியிருந்தார்.
Thank You SSN, for being a great audience..! ❤️#VeetlaVisheshamFromJune17th pic.twitter.com/oNhkBCFicz
— RJ Balaji (@RJ_Balaji) May 17, 2022