தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ரோஜா. இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்து கொண்ட ரோஜா இரு குழந்தைகளுக்கு தாயாகி பின் அரசியலில் பணியாற்றி வருகிறார்.
ஆந்திராவில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது அதன் உறுப்பினராக சேர்ந்து 2014ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிப்பெற்று எம் எல் ஏ-வானார். இதையடுத்து 2019ல் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலிலும் வெற்றிபெற்று தொடர் வெற்றியை தக்கவைத்தார்.
தற்போதுள்ள முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியால் ஏபிஐஐசி-யின் தலைவராக நியப்பட்டுள்ளார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சி ரோஜாவும் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது முதல்வர் காலில் விழுந்து மரியாதை செலுத்திவிட்டு கையில் முத்தம் கொடுத்துள்ளார் ரோஜா. அண்ணன் தங்கையை போல் இருவரும் கட்சியில் சிறப்பாக பணியாற்றி வருவதை சிலர் சர்ச்சையான கருத்திக்களை கூறி கிண்டல் செய்து வருகிறார்கள்.
இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து அண்ணன் தங்கை போல் காட்டும் அன்பினை அறியாமல் இப்படி செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறி வருகிறார்கள்.