ஆஸ்கார் விருது விழாவில் நடிகர் வில் ஸ்மித் அவரது மனைவி பற்றி அவதூறாக கிண்டல் செய்த பேசிய கிரிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்தார். மிகப்பெரிய அளவில் சர்ச்சையான இச்சம்பவம் ஹாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.
தான் ஆஸ்கார் விருது விழாவில் இப்படி நடந்துகொண்டது பற்றி மன்னிப்பு கேட்டிருந்தார் வில் ஸ்மித். ஆனால் தான் செய்தது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என் கூறிய அவர் அகாடமியில் இருந்து ராஜினாமா செய்தார்.
அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது என்பதால் இனி வில் ஸ்மிதா ஆஸ்கார் விருது வாக்கெடுப்பில் வாக்களிக்க முடியாது.
இந்நிலையில் அகாடமியின் disciplinary review இன்று நடைபெற்றது. அதில் வில் ஸ்மித் செயல் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும், அதனால் அவருக்கு 10 வருடங்கள் அகாடமியில் தடை விதிப்பதாக அறிவித்து உள்ளனர்.
10 வருடங்களுக்கு அவர் ஆஸ்கார் விருது விழா மற்றும் அகாடமியின் மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது.