விபத்தில் மாணவன் பலி – இலுப்படிச்சேனையில் சோகம்

கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோப்பாவெளி பிரதான வீதியில் இடம் பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞன் ஒருவர் தலத்தில் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலுப்படிச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த (17) வயதுடைய வசந்தகுமார் ஜெயசந்துரு என்பவரே உயிரிழந்தவராவார்.

கடந்த் (26) ம் திகதி தனது மைத்துணருடன் கோப்பாவெளி பிரதேசத்தில் உள்ள நெற்காணியினை பார்வையிட்டு அன்று இரவு வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது வீதியை விட்டு மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்சாரத்தூணில் மோதியதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுதலுக்கமைவாக சம்பவ இடத்திற்குச் சென்ற பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்;.நசீர் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..