Home Accident News விபத்தில் பெண் பலி – ஆறு பேர் காயம்

விபத்தில் பெண் பலி – ஆறு பேர் காயம்

கப்பெட்டிபொல பலுங்கல பிரதேசத்தில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக கப்பெட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனத்தில் பயணித்த 7 பேர் காயமடைந்து வெலிமடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன், ஆபத்தான நிலையில் இருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குருநாகல் ரிதிகம பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குருநாகல், ரிதிகம பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் இந்த விபத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். வெலிமடை, போகஹகும்புர பிரதேசத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வாகனத்தின் சாரதி தூங்கியதால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கப்பிட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇன்றைய ராசிபலன் – 11/09/2022, ரிஷப ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..
Next articleயாழில் கொடூரம்!! போதைப்பொருளிற்கு அடிமையான சகோதரனால் தங்கை துஸ்பிரயோகம்!! விரக்தியில் தங்கை உயிரை மாய்ப்பு