ஏறாவூர் பொலிஸ் பிரிவு, மாவடிவேம்பு பெற்றோல் நிரப்பு நிலையத்துக்கு அருகாமையில் இன்று அதிகாலை (10.07.2021) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
கொழும்பிலிருந்து காத்தான்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்த வேனில் மோதியே குறித்த நபர் சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளார்.
மாவடிவேம்பு எல்லை வீதிக்கு அருகாமையிலுள்ள மணல் ஒழுங்கையொன்றிலிருந்து திடீரென வீதிக்கு ஓடி வந்த நபரே இவ்வேனில் மோதியதாக சாரதி தெரிவித்தார்.
சுமார் 50 வயது மதிக்கத்தக்க இந்த நபர் யாரென அடையாளம் கண்டால், ஏறாவூர் போக்குவரத்து பொலிஸ் பிரிவோடு தொடர்பு கொள்ளுங்கள்.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.