Home Accident News பேரூந்து – மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை , மகன் பலி; பேரூந்து மீது பொதுமக்கள்...

பேரூந்து – மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை , மகன் பலி; பேரூந்து மீது பொதுமக்கள் தாக்குதல்

வவுனியா பூவரசங்குளம் குருக்கள் புதுக்குளம் பகுதியில் இன்று காலை 9.00 மணியளவில் பேரூந்து – மோட்டார் சைக்கிள் மோதுண்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வவுனியா – மன்னார் வீதி குருக்கள் புதுக்குளம் பகுதியில் உள்ள ஒழுங்கை ஒன்றில் இருந்து பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிள் ஒன்று ஏற முற்பட்டுள்ளது. இதன் போது மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்து மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் பேரூந்தின் கீழ்ப்பகுதியில் சிக்குண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் வழியில் உயிழந்துள்ளார்.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் இணைந்து பேரூந்தின் மீது தாக்குதல் மேற்கொண்டு பேரூந்தின் கண்ணாடிகளை சேதப்படுத்தியுள்ளனர்.

இதனால் அப்பகுதில் பதட்ட நிலமை நிலவியதுடன் பூவரசங்குளம் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு நிலமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இச் சம்பவத்தில் 35 வயதுடைய தந்தை மற்றும் 17வயதுடைய மகன் ஆகியோரே உயிரிழந்தவர்களவார்.

மோட்டார் சைக்கிள் மோதுண்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் மோதுண்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் மோதுண்ட விபத்தில்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழில் பல மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது
Next articleயாழில் சிறையிலுள்ள பிரபல போதைப்பொருள் வியாபாரியின் மகளும், மகனும் கைது: கஞ்சா மீட்பு