Home Accident News விபத்தில் சிக்கி தம்பலகாமம் சிராஜ் நகரை சேர்ந்தவர் பலி: நால்வர் காயம்!

விபத்தில் சிக்கி தம்பலகாமம் சிராஜ் நகரை சேர்ந்தவர் பலி: நால்வர் காயம்!

கதரஸ்கொடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டி – திருகோணமலை பிரதான வீதியில் இன்று (21) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தம்பலகாமம் சிராஜ் நகரை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 56 வயதான நபராவார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தம்பலகாமம் நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வாகனத்துடன் வேன் மோதியதில் வேனில் பயணித்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காயமடைந்த நால்வர் தம்புள்ள பொதுவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கதரஸ்கொடுவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஅமெரிக்காவில் காற்றில் பறந்த பணம்; அள்ளிச் சென்ற பொதுமக்கள்; துரத்திய பொலிசார்.
Next articleஆபாச படங்களைப் பார்த்து தனது 5 வயது தங்கையிடம் பரீட்சித்த 14 வயது அண்ணன்!