இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘விடுதலை’ திரைப்படம் இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை தொடங்கியுள்ளதாகவும், விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என்றும் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சிறுமலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
The 50 long days 4th schedule shoot of our film #VIDUTHALAI directed by Mr. Vetri Maaran is going on in full swing now at Sirumalai.
Release date will be revealed soon.@VijaySethuOffl @sooriofficial @VetriMaaran @ilaiyaraaja @rsinfotainment @mani_rsinfo @VelrajR @DoneChannel1 pic.twitter.com/Frx7tV3RWU
— Red (@elredkumar) May 21, 2022
ஜெயமோகன் எழுதிய சிறுகதையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி வாத்தியார் வேடத்தில் நடிக்க, சூரி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த ஆண்டு இறுதியில் படம் திரையரங்குகளில் வெளியிட தயாராகி வருகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார்.