விஜய்டிவியில்ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய நடிகை தான் சித்ரா. இவர் கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமைகளை வெளிக்காட்டி மேலே வந்தவர்.
புகழின் உச்சத்தில் இருந்த இவர் சில வருடத்திற்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணம் மக்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இன்றும் இது புரியாத புதிராகவே இருந்து வருகின்றது.
மேலும் அவரது மரணத்திற்கு கணவர் ஹேமந்த் தான் காரணம் என அவரது பெற்றோர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் திடீரென ஹேமந்த் தன்னை சிலர் மிரட்டுகிறார்கள், எனக்கு பாதுகாப்பு கொடுத்தால் நான் சித்ரா மரணத்திற்கான உண்மைகளை கூறுவேன் என கூறி வருகிறார்.
இது ஒருபுறம் இருக்கு சித்ராவின் தோழியான ரேகா ஹேமந்த் மட்டும் இந்த கொலையை செய்யவில்லை. இவருடன் இணைந்து இன்னும் பலர் செய்துள்ளனர். அவர்கள் யாரென்றும் தெரியும் என்று பல்வேறு சேனல்களில் பேட்டி கொடுத்து வருகின்றார்.
இந்த நேரத்தில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வரதராஜன், ஹேமந்த் சூளைமேட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் தான் தங்கள் திருமணம் நடைபெற்றதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் அப்படி ஒரு ஹோட்டல் இல்லை. அவரது இறப்பு சம்பந்தப்பட்ட பல தகவல்கள் இன்னும் வெளிவராமல் இருக்கிறது. மேலும் அவர் மரணமடைந்த அன்று கைரேகை நிபுணர்கள் விசாரிக்கவில்லை. அந்த இடத்தில் இருந்து எந்த கைரேகையை ஆதாரங்களும் கைப்பற்றப் படவில்லைஎனக் கூறியுள்ளார்.
இவ்வாறு பல விடயங்கள் வெளியாகி வருவதால் சித்ராவின் மரணத்திற்கான காரணம் என்ன என்பது மட்டும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.