விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி இருந்தது. அப்படத்தை தொடர்ந்து விஜய் நடித்துள்ள திரைப்படம் தான் பீஸ்ட்.
நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்ட முதல் காட்சியைக் காண திரையரங்குகளில் திரண்டனர் ரசிகர்கள்.
படம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த ரசிகர், ‘படம் அந்தளவுக்கு வரல. எதிர்பார்த்தது எதுவுமே இல்ல. பீஸ்ட்டு பீஸ்ட்டுன்னு ரொம்ப எதிர்பார்ப்போட போனோம். ஆனா அந்தளவுக்கு எதுவுமே இல்ல. தளபதி படம்னாலே கமர்ஷியலா எண்டெர்டெயின்மெண்டா இருக்கு. ஆனா இதுல எதுமே இல்ல. நெல்சன் விஜய்யை வச்சி செஞ்சிட்டாரு. முதல் பாதி பரவால, எதோ போய்டுச்சு. இரண்டாவது பாதி தான் ரொம்ப இழுத்தது. ஒரு புல்லட் கூட விஜய் மேல படல. படம் வேஸ்ட்டு, அதுக்கு நாளைக்கு கே.ஜி.எஃபே போய்டலாம் என்றார்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது விஜயின் பீஸ்ட் திரைப்படம்….
அதிகாலை சிறப்புக் காட்சியை ஆர்வமுடன் கண்டு ரசித்த ரசிகர்கள்…#Beast #BeastFDFS #Vijay pic.twitter.com/KY331Qz8Li
— News18 Tamil Nadu (@News18TamilNadu) April 13, 2022
விஜய் ரசிகரின் இந்த விமர்சனம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உக்ரைன் போருக்கு விஜய அனுப்பலாம்#BeastDisaster pic.twitter.com/RUxxtd8HPu
— ? Ajith Kumar? (@Anythingf4AJITH) April 13, 2022
மற்ற மொழிகளில் உள்ள ஹீரோக்கள் எப்படி எப்படியெல்லாம் நடிக்கிறார்கள். பான்–இந்தியா எல்லாம் பறக்கிறார்கள் என்பதை விஜய் போன்ற மிகப் பெரும் வியாபார எல்லை உள்ள ஹீரோக்கள் கூர்ந்து கவனித்துப் பார்த்து தங்கள் படங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.பீஸ்ட் – நோ டேஸ்ட்.
இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு விஜய் ரசிகர்களுக்கே இந்த படம் சற்று எரிச்சலை தந்துள்ளது . அதுவும் முக்கியமாக இண்டெர்வெல் சீன் ரசிகர்களுக்கு கோவம் வர மாதிரி காமெடி வைத்துள்ள நெல்சன் இதனால் #BeastDisaster என்ற ஹாஸ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது ..