விஜய்யால் இயக்குனர் ஷங்கருக்கு ஏற்பட்ட தலைவலி! துரோகம் செய்யும் தயாரிப்பு நிறுவனம்?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் 2.O படத்திற்கு பிறகு தெலுங்கு நடிகர் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானியை வைத்து ஆர்சி15 படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தினை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.

படத்தில் ஷூட்டிங் மற்றும் மற்ற வேலைகள் விருவிருப்பாக சென்று கொண்டிருக்கும் போது, இயக்குனர் சங்கர் மகள், மருமகன் பிரச்சனையில் மாட்டி சோகத்தில் இருந்து வருகிறார். இது ஒரு புறம் இருந்தாலும் படத்தின் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார் சங்கர்.

இந்நிலையில் நடிகர் விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் ஹைதராபாத்தில் முதல் கட்டப்படப்பிடிப்பினை முடித்துள்ளார். இப்படத்தையும் தயாரிப்பாளர் தில் ராஜ் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. இந்நிலையில் ஆரம்பத்தில் சங்கர், ராம் சரண் படத்திற்கு கொடுத்த ஈடுபாடு தற்போது குறைந்துவிட்டதாம்.

அதற்கு காரணம் தளபதி 66 படத்திற்கு மட்டும் பணத்தையும் நேரத்தையும் செலவிட்டுவிட்டு சங்கர் படத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்களாம். இதற்கு காரணம் விஜய் படத்தினை விரைவில் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டது தானாம்.

அப்படி என்றால் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் மற்றும் ராம் சரண், கியாரா அத்வானி கால்ஷீட்டுக்கு என்ன பதில் என்று படக்குழுவினர் கேட்டு புலம்பி வருகிறார்களாம்.

இப்போது தான் ராம் சரணும், கியாராவும் தாங்கள் நடித்த படத்தின் வெளியீட்டுக்கு பின் மீண்டும் ஷூட்டிங்கிற்கு வந்திருக்கிறார்கள். அதில் இந்த விவகாரம் இன்னும் படப்பிடிப்பினை இழுத்தடிக்கும் என்று டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..