Home Cinema விஜயின் கழுத்தை பிடிக்கும் தியேட்டர் உரிமையாளர்கள்..! பெருத்த நஷ்டத்தால் விடிய விடிய நடந்த பீஸ்ட் பட...

விஜயின் கழுத்தை பிடிக்கும் தியேட்டர் உரிமையாளர்கள்..! பெருத்த நஷ்டத்தால் விடிய விடிய நடந்த பீஸ்ட் பட பஞ்சாயத்து !

2022 இல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ‘பீஸ்ட் ’ ஏப்ரல் 13 அன்று வெளியானது. இப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கலவையான கருத்துக்களைப் பெற்றுள்ளது. படத்தில் விஜய்யின் நடிப்பால் ரசிகர்கள் திருப்தி அடைந்தனர்; இருப்பினும், படம் பலவீனமான கதைக்களத்தைக் கொண்டிருந்ததால் அவர்கள் மனமுடைந்து போனார்கள்.

ரஜினிகாந்த் நடித்து திரைக்கதை வசனம் எழுதி சொந்த தயாரிப்பில் 2002ம் ஆண்டு வெளியான படம் பாபா, சுமார் மூன்று வருட இடைவெளிக்கு பின்பு ரஜினி நடிப்பில் வெளியான பாபா படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனை தொடர்ந்து பாபா படத்தை வெளியிட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சென்னையில் உள்ள ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட்டு நஷ்ட தொகை கேட்டு குரல் கொடுத்து வந்தனர்.

விஜயின் கழுத்தை பிடிக்கும் தியேட்டர் உரிமையாளர்கள்..! பெருத்த நஷ்டத்தால் விடிய விடிய நடந்த பீஸ்ட் பட பஞ்சாயத்து !

ரஜினிகாந்த் சொந்த தயாரிப்பில் வெளியான படம் பாபா என்பதால், அந்த படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்ய பணம் கொடுத்து சமாதானம் செய்தார் ரஜினிகாந்த், இதற்கு பின்பு ரஜினி நடிப்பில் வெளியான குசேலன், லிங்கா போன்ற படங்கள் தோல்வியை தழுவிய போது மீண்டும் திரையரங்கு உரிமையாளர்கள் நஷ்ட்ட தொகை கேட்டு குரல் கொடுக்க கண்டுகொள்ளாமல் கடந்து சென்றுவிட்டார் ரஜினிகாந்த். இந்நிலையில் தற்பொழுது சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட்,

இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை, படம் வெளியான அடுத்த நாளே படம் பார்க்க ஆட்கள் இல்லாமல் பீஸ்ட் படத்தை வெளியிட்ட திரையரங்குகள் காற்று வாங்கியது. பீஸ்ட் படம் வெளியான அடுத்த நாள் கர்நாடக நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான KGF படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு பக்கம் KGF படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கையில், மறுபக்கம் பீஸ்ட் படத்தை பார்க்க ஆட்கள் இல்லாமல் மண்ணை கவ்வி படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில் பல திரையரங்குகளில் பீஸ்ட் படத்தை தூக்கிவிட்டு KGF திரையிடப்பட்டது. இது இனி வரும் காலங்களில் படைப்புகள் நன்றாக இருந்தால் யார் நடித்திருந்தாலும் தமிழக மக்கள் அங்கிகரிப்பார்கள், குப்பை படத்தில் நட்சத்திர நடிகர் நடித்திருந்தால் கூட இனி மக்கள் ஏமாறுவதர்க்கு தயாரக இல்லை என்பதை இது உணர்த்தியுள்ளது. இந்நிலையில் பீஸ்ட் படத்தை வெளியிட்ட திரையரங்குகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

இதனை தொடர்ந்து நஷ்ட தொகை கேட்டு அந்த படத்தின் நடிகர் விஜய்யிடம் முறையிடுவதற்காக திரையரங்கு உரிமையாளர்கள் விஜய் வீட்டை முற்றுகையிடலாம் என கூறப்படுகிறது, அப்படி நஷ்ட தொகை கொடுக்கவில்லை என்றால் விஜய் புதிய படத்தை திரையரங்குகளில் வெளியிடமாட்டோம் என திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் சார்பில் தீர்மானம் நிறைவேற்ற படலாம் என்று கூறப்படுகிறது .

இந்நிலையில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ஒரு பேட்டியில், சூழ்நிலையும் வாய்ப்பும் அமைந்தால் ‘பீஸ்ட் ’ இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்று கூறியதாக கூறப்படுகிறது. ஒரு பிராந்திய ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், நடிகர் விஜய் வீரராகவன் வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் படத்தின் 2-ம் பாகம் இருக்கும் என்று கூறினார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleதிகன நகரில் பாரிய ஆரப்பாட்டம் !! போக்குவரத்து முற்றாக தடை
Next articleபற்றி எரியும் இலங்கை !! ரயில் பாதைகளை மறித்தும் பல பகுதிகளில் போராட்டங்கள்