Home Accident News விசுவமடு 12 ம் கட்டை பகுதியில் விபத்து ஒருவர் படுகாயம்

விசுவமடு 12 ம் கட்டை பகுதியில் விபத்து ஒருவர் படுகாயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு 12 ம் கட்டை பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு 12 ம் கட்டை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது

இதன்போது படுகாயமடைந்த நபர் 1990 அவசர நோயாளர் காவு வண்டி மூலம் தர்மபுரம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவடக்கு கிழக்கிற்கு 16 இலட்சம் தடுப்பூசிகள் – அமைச்சர் டக்ளஸிடம் கையளிப்பு
Next articleவவுனியாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்ணுக்கு கொரோனா