மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் பிரதேசத்தில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்று, அதன் இரு டயர்களையும் களட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.
அத்தோடு, மோட்டார் சைக்கிளை குளத்தை அண்டிய பகுதியில் திருடர்கள் கை விட்டுச் சென்றுள்ளனர்.
மூதூர் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அரச ஊழியர் ஒருவரின் மோட்டார் சைக்கிளையே, நேற்று முன்தினம் (15) இரவு இவ்வாறு திருடர்கள் களவாடிச் சென்றுள்ளனர்.
இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தோப்பூர் பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் ஒன்றின் பெற்றோல் தாங்கி மாத்திரம் திருடிச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.