கடந்த 29.07.21 அன்று விசுவமடு நகர்பகுதியில் இடம்பெற்ற விபத்தின் போது படுகாயமடைந்த 19 அகவையுடைய இளைஞன் யாழ் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 07.08.21 அன்று உயிரிழந்துள்ளார்.
விசுவமடு மாணிக்கபுரத்தினை சேர்ந்த 19 அகவையுடைய சசிக்குமார் தனோஜிகன் என்ற இளைஞனே உந்துருளியில் பயணித்த போது ஹயஸ் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இந்த விபத்தினை தொடர்ந்து ஹயஸ் வாகனம் புதுக்குடியிருப்பு பொலீசாரால் பொலீஸ் நிலையம் கொண்டுசெல்லப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் காயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.