விக்ரம் படத்தில் கமலை பெண்டு கழட்டிய லோகேஷ் கனகராஜ்…ஆடிப்போன கோலிவுட்…..

கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என அனைத்து வுட்களிலும் டாக் ஆஃப் தி டவுண் என்றால் அது விக்ரம் திரைப்படம் தான். ஒரு பக்கம், விக்ரம் ஹிட்டலிஸ்ட் என்ற பெயரில் ஹிந்தி ட்ரைலர் பட்டைய கிளப்ப, அடுத்து தெலுங்கு ட்ரைலரை ராம் சரண் களமிறக்கி பிரமிப்பூட்டியுள்ளார்.

Vikram

கமல்ஹாசன் உடன், விஜய் சேதுபதி, பகத் பாசில் , நரேன் என பலர் நடித்துள்ளனர் என்பதும், சூர்யா முக்கியமான ஒரு கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார் என்பதும், சூர்யா, ‘விக்ரம்’ படத்தின் அடுத்த பாகத்தில் ஹீரோவாக இருப்பார் என கூறப்படும் செய்திகள் விக்ரம் படம் மீதான எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் கூட்டுகின்றன.

விக்ரம் படத்தில் கமலை பெண்டு கழட்டிய லோகேஷ் கனகராஜ்…ஆடிப்போன கோலிவுட்…..

இத்திரைப்படம் பற்றிய ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதனை லோகேஷ் கனகராஜ் அவர்களே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அதாவது, தான் பார்த்து வியந்து அவரை போல ஒரு நல்ல இயக்குனராக வர வேண்டும் என நினைத்திருக்கையில், அவரையே இயக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாவும்,

ஒரு கட்டத்தில் மற்ற ஹீரோ என்றால் நான் ஒன் மோர் கேட்டு வாங்கி கொள்வேன். இது எப்படி என்று தெரியவில்லை. என்று கமலிடம் சென்று இது பற்றி கேட்டுள்ளார். அதற்கு கமலும், காட்சி சரியாக வரவேண்டும் என்றால் எத்தனை முறை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

விக்ரம் படத்தில் கமலை பெண்டு கழட்டிய லோகேஷ் கனகராஜ்…ஆடிப்போன கோலிவுட்…..

அதன் பிறகு தைரியமாக தனது வேலையை ஆரம்பித்து விட்டாராம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதன் படி, சில ஒரு குறிப்பிட்ட காட்சி சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக கமலிடம் 12 டேக் வாங்கினாராம். இது தான் அதிகபட்சம். நான் எண்ணிக்கொண்டே இருந்தேன் என தெரிவித்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கமலுக்கே 12 டேக் என்றால் மற்ற நடிகர்களின் நிலைமை என்னவாக இருக்கும் என கோலிவுட்வாசிகள் வியந்து நிற்கின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..