அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த ‘கோப்ரா’ இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ‘கோப்ரா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார், இதில் அஸ்லான் யில்மாஸ் என்ற துருக்கிய இன்டர்போல் அதிகாரியாக நடிக்கிறார். கோப்ரா படத்தில் விக்ரம் 20க்கும் மேற்பட்ட தோற்றங்களில் நடிக்கிறார். ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லலித் குமாரின் 7 ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். திங்கட்கிழமை வரும் சுதந்திர தினத்திற்கு (ஆகஸ்ட் 15) முந்தைய வார இறுதி நாட்களைப் பயன்படுத்தி, ஆகஸ்ட் 11 (வியாழன்) அன்று படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் விக்ரம், இர்பான் பதான் தவிர ‘கேஜிஎஃப்’ புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி, மலையாள நடிகர் லால், கனிகா, பத்மப்ரியா, பாபு ஆண்டனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.