Home Cinema விக்ரமின் கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதி இதோ !!

விக்ரமின் கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதி இதோ !!

இவர் ஏற்கனவே 2015ல் அருள்நிதி நடித்த ‘டிமான்டே காலனி’ மற்றும் 2018ல் நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் நடித்த ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎஃப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். அவர்களுடன் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் உள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார்.

கோப்ரா படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் (14.02.2022) நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு 3 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இரண்டாவது தனிப்பாடலான அதிரா ஏப்ரல் 22 அன்று வெளியாகி சூப்பர் ஹிட்டானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் பாடலுக்கு பி.விஜய் வரிகள் எழுதியுள்ளார்.

கோப்ரா ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை தொடர் விடுமுறைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இவை தவிர விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  ப்பா.. பாகுபலி வசூலை பந்தாடிய​ வலிமை வசூல் !!
READ MORE >>>  12 வருடம் நாசமா போச்சு-கழுவி ஊற்றிய இமான் முதல் மனைவி வேதனை !!
Previous articleமாமனாருக்கு நன்றிகெட்ட மனுஷனாக மாறிய தனுஷ்!! இவரா இப்படி ?நீங்களே பாருங்க
Next articleஇணையத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மாஸ் வீடியோ இதோ !!