நானும் ரவுடி தான் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் – நயன்தாரா – விஜய் சேதுபதி கூட்டணி இரண்டாவது முறையாக காத்துவாகுல ரெண்டு காதல் படத்தில் இணைந்துள்ளது.
இவர்களுடன் சமந்தாவும் இந்த படத்தில் இணைந்திருப்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு விஜய் கார்த்திக் கண்ணன். இப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது.
இந்தப் படத்தில் கதீஜாவாக சமந்தா நடிக்கிறார். கண்மணியாக நயன்தாரா நடிக்கிறார். ராம்போவாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதுவரை வெளியாகியுள்ள போஸ்டர்கள் மற்றும் டீசரைப் பார்க்கும்போது, விஜய் சேதுபதி அவர்கள் இருவரையும் காதலிப்பது போல் கதை அமைந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் அறிவித்தனர்.
இப்படத்தின் அடுத்த பாடல் டிப்பம் டப்பம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலில் சமந்தா மற்றும் அவரது காதலரான முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் இடம்பெற்றுள்ளனர். விஜய் சேதுபதி, பவுன்சராக காட்சியளிக்கிறார். பாடலைப் பார்க்கும்போது, VJS சமந்தாவின் தோற்றத்திற்காக ஏங்குவதைக் காணலாம் மற்றும் அந்த உணர்வோடு பாடுகிறார். இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் மற்றும் அந்தோணி தாசன் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோர் பாடியுள்ளனர். பாடல் வெளியானதில் இருந்து 2 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
இந்த பாடலில் சமந்தாவின் காதலனாக ஸ்ரீசாந்த் நடிக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இப்படத்தில் முகமது மோபி கேரக்டரில் ஸ்ரீசாந்த் நடிப்பார் என ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், சமந்தாவின் காதலனாக ஸ்ரீசாந்த் நடிப்பார் என தெரிகிறது.
இந்நிலையில் தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது . இதோ