தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா ரஜினி, அஜித், விஜய், தனுஷ், சூர்யா, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்து விட்டார். இவர் தற்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள சோலோ ஹீரோயின் திரைப்படங்களில் நடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.
நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காதம்பரியாக ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நடித்த போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் கசிந்தன.. அதனை தொடர்ந்து சிலகாலம் அமைதி காத்த இருவரும் தாங்கள் காதலித்து வருவதை செல்ஃபி புகைப்படங்கள் மூலமாக உறுதிப்படுத்தினார்கள்.
மேலும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் கோடம்பாக்கத்தினரும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரின் திருமணத்தையும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தமிழில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவுடன் இணைந்து காத்துவாக்கில ரெண்டு காதல் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படம் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸாகி ரசிகர்களிடத்தே அமோக வரவேற்ப்பை பெற்று வருகின்றது.அதனை தொடர்ந்து இருவரும் திருப்பதி கோயிலுக்கு ஜோடியாக சென்று வந்தனர்.
இந்நிலையில் தனது வருங்கால கணவருக்கு சிவப்பு நிற காஸ்ட்லி ஃபெராரி காரை பரிசாக அளித்துள்ளாராம் நடிகை நயன்தாரா. எனினும் சமீபத்தில் அந்த காருடன் நின்றபடி போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார் விக்னேஷ் சிவன். இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா பரிசாக கொடுத்த அந்த சொகுசு காரின் விலை 7.5 கோடி என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையில் அடுத்த மாதம் ஜூன் 9ம் தேதி திருப்பதியில் இவர்கள் திருமணம் நடைபெற போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இதற்காகவே நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுக்கு இந்த விலையுயர்ந்த பரிசை அளித்துள்ளதாக செய்திகள் தீயாக பரவி வருகிறது.