வாழைச்சேனை ஹைராத் வீதியில் வீடு தீயினால் சேதமடைந்த சம்பவம் நேற்று முன்தினம் (03.08.2021) இரவு இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயலுக்கு முன்பாகவுள்ள வீடே தீயினால் சேதமடைந்துள்ளதுடன், வீட்டிலிருந்த மின் பாவனைப்பொருட்கள் மற்றும் பெறுமதிமிக்க பொருட்கள் என்பன தீயினால் சேதடைந்துள்ளது.
தீயினால் உயிராபத்து எதுவும் இடம் பெறவில்லை என்றும், சேத விபரங்கள் பெறப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹைராத் பள்ளிவாயலுக்கு முன்பாகவுள்ள மிக்ஸர் கடை உரிமையாளரின் வீடே தீயினால் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.