வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நேற்று (05.08.2021) இரவு பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் உரபேக்கில் கட்டப்பட்ட பார்சலை ஒருவர் கொண்டு வந்து வைத்துவிட்டு பத்து நிமிடத்தில் எடுத்துக் கொள்வதாக சொல்லி விட்டு சென்றவர் வராத காரணத்தினால் வர்த்தக நிலைய உரிமையாளர் சந்தேக நபருக்க தொலைபேசி அழைப்பை விடுத்த போது அதை வைத்துக் கொள்ளுங்கள் நான் வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பார்சலில் சந்தேகம் கொண்ட வர்த்தக நிலைய உரிமையாளர் பொலிஸ் நிலையம் சென்று செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபரும் வர்த்தக நிலைய உரிமையாளரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட குடும்பப் பெண் வாழைச்சேனை அல்லாப்பிச்சை வீதியை சேர்ந்த முகம்மட் கனீபா சித்தி லைலா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரனைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.