Home Local news வார இறுதி மின்வெட்டு தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அனுமதி

வார இறுதி மின்வெட்டு தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அனுமதி

வார இறுதியில் மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, நாளைய தினம் நாடளாவிய ரீதியில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும், நாளை மறுதினம் 3 மணித்தியாலங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாளைய தினம் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் 2 மணிநேரம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அவ்வாறே, குறித்த வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(24) A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அவ்வாறே, குறித்த வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 5.20 மணிமுதல் இரவு 9.20 மணிவரையான காலப்பகுதியினுள் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇன்றைய ராசிபலன் 22.04.2022 இதோ !!
Next articleயாழில் சிறுவனின் உயிரிழப்பிற்கு நீதி கோரி கொதித்தெழுந்த மக்கள்