வாகன விபத்துக்களில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 11 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் இரண்டு பாதசாரிகளும், 6 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும், 2 சைக்கிள் ஓட்டுநர்களும் அடங்குகின்றனர்.
அத்துடன், லொறியில் பயணித்த ஒருவரும் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.
நாளொன்றில் 11 பேர் உயிரிழப்பதென்பது சாதாரண விடயம் கிடையாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.