பயணக்கட்டுப்பாட்டுக் காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக கொழும்பிற்குள் வருகைத்தரும் வாகனங்களுக்கு விசேட அனுமதி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
இவ்வாறு ராஜகிரிய மற்றும் பத்தரமுல்ல ஆகிய பகுதிகளில் வைத்து கொழும்புக்குள் உள்நுழையும் வாகனங்களுக்கு பொலிஸார் ஸ்டிக்கர் ஒட்டும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.
பச்சை நிறம்: சுகாதார சேவைகளில் ஈடுபடுவோர்
இளம் நீலம்: முப்படையினர், பொலிஸார்
ஊதா நிறம் : தனியார் துறைக்கு சொந்தமான அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் ( வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள்)
இளம் மண்ணிறம்: ஏற்றுமதி, இறக்குமதி, உற்பத்தி, தொழிற்சாலைகளுடன் தொடர்புப்பட்டவர்கள்
மஞ்சள்: அத்தியாவசிய விநியோகம் தொடர்பில்
சிவப்பு: அத்தியாவசிய பகிர்ந்தளிப்புகள்
செம்மஞ்சள் : ஊடகம் மற்றும் தொடர்பாடல் சேவைகள்
வெள்ளை: வெளிநாட்டுக்கு செல்லல் தொடர்பிலான விடயங்களுக்காக (விமான நிலையம் செல்லல், அங்கிருந்து திரும்புதல்)
கறுப்பு: மனிதாபிமான காரணங்களுக்காக ( மரணங்கள், வைத்திய பரிசோதனைகள், மருந்து எடுப்பதற்காக செல்லுதல் போன்றன)
சாம்பள் நிறம்: சமைத்த உணவு மற்றும் டிலிவரி சேவைகளுக்காக
ரோஸ் நிறம் : அரச சேவையின் ஏனைய நடவடிக்கைகளுக்காக