Home வவுனியா செய்திகள் வவுனியா மதுபான சாலைகள் முன் திரண்ட மது பிரியர்கள் கைது

வவுனியா மதுபான சாலைகள் முன் திரண்ட மது பிரியர்கள் கைது

கொவிட் பரவல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட நேரத்தில் வவுனியா மதுபானசாலைகளின் முன்னால் அதிகளவினான மதுப்பிரியர்கள் குவிந்த நிலையில் சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் இணைந்து 13 பேரை கைது செய்துள்ளனர்.

நாடு பூராகவும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் மதுபானசலைகளை திறப்பதற்கு மது வரித் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மதுபானசாலைகள் முன்பாக அதிகளவிலான மதுப் பிரியர்கள் திரண்டிருந்தனர். அத்துடன் நகரின் கண்டி வீதியில் அமைந்திருந்த மதுபானசாலை ஒன்று திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. அங்கு சென்று சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் மதுபானசாலை முன்பாக நின்றோர், வீதிகளில் சென்றோர், வானங்கள், மோட்டார் சைக்கிள்களை மறித்து சோதனை செய்ததுடன், 13 பேரை கைது செய்தனர்.

வவுனியா மதுபான சாலைகள் முன் திரண்ட மது பிரியர்கள் கைது
சம்பவ இடத்திற்கு மதுவரி திணைக்கள அதிகாரிகள் வருகை தந்து மதுபானசாலைகளை திறப்பதற்கு தாம் அனுமதி வழங்கியதாகவும், திறக்க முடியும் எனவும் தெரிவித்தனர்.

ஆனால், சுகாதாரப் பிரிவினர் அதிகளவிலானவர்கள் சுகாதார நடைமுறைகளை மீறி திரண்டு இருந்தமையால் அனுமதி வழங்க முடியாது எனத் தெரிவித்து, குறித்த மதுபானசாலையை தனிமைப்படுத்தியதுடன் மதுபானசாலை முன் நின்றோர், வீதிகளில் சென்றோர் என 13 பேரை கைது செய்திருந்தனர்.

இன்று முதல் மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

திறந்த ஓரிரு நிமிடங்களில் அலைமோதிய கூட்டத்திற்கு காத்திருந்த ஏமாற்றம்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமலசலக்கூட கைக்குண்டு; மற்றுமொருவர் கைது!
Next articleயாழில் மதுபானம் வாங்க காத்திருப்போர்