Home Local news வவுனியா பொது வைத்தியசாலையில் டிக்டொக் காணொளி பதிவிட்டவருக்கு நேர்ந்த கதி

வவுனியா பொது வைத்தியசாலையில் டிக்டொக் காணொளி பதிவிட்டவருக்கு நேர்ந்த கதி

வவுனியா பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் உத்தியோகத்தர் ஒருவர் கடமை நேரத்தில் டிக்டொக் காணொளியை பதிவிட்டமையால் வைத்தியசாலை பணிப்பாளரால் குறித்த உத்தியோகத்தருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கடமை நேரத்தில் டிக்டொக் காணொளியினை பதிவிட்டுள்ளார் இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பெண் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி தகாதவார்த்தை பிரயோகம் மற்றும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாமாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடமை நேரத்தில் டிக்டொக் காணொளியினை பதிவுசெய்த பெண் உத்தியோகத்தருக்கு வைத்திசாலை பணிப்பாளரால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அரச உத்தியோகத்தர் ஒருவர் அதுவும் வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர் இவ்வாறு டிக்டொக்காணொளியைக் கடமை நேரத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளமை அர்பணிப்பு நிறைந்த சேவையாற்றும் வைத்திய சாலைக்கு அபகீர்த்தியையும் ஏனைய அப்பணிப்புடன் சேவையாற்றும் உத்தியோத்தருக்கும் களங்கத்தினையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TikTokகில் கலக்கிவரும் வவுனியா பொது வைத்தியசாலை ஊழியர்

 

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleறம்புக்கனையில் முச்சக்கர வண்டிக்கு தீ வைத்த பொலிஸார்
Next articleநீர்வேலியை சேர்ந்த ஐவர் உள்ளிட்ட 18 பேர் நேற்று தமிழகத்திற்கு – ஒரு மாத காலத்தில் 60 பேர் தஞ்சம்