வவுனியா நோக்கி பயணித்த பட்டா ரக வாகனமொன்று மன்னார் – அரிப்பு பகுதியில் வைத்து நேற்று இரவு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
குறித்த வாகனம் அரிப்பு பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு நேற்று மாலை பொருட்களை விநியோகித்து விட்டு வவுனியா திரும்பும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இதன் காரணமாக குறித்த பட்டா ரக வாகனம் முழுமையாக எரிந்துள்ளதோடு, பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
எனினும் சம்பவத்தின் போது குறித்த வாகனத்தில் பயணித்த இருவரும் எவ்வித காயங்களும் இன்றி தப்பியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.