Home வவுனியா செய்திகள் வவுனியா நாட்டாமை அடி காயங்களுடன் சடலமாக மீட்பு

வவுனியா நாட்டாமை அடி காயங்களுடன் சடலமாக மீட்பு

வவுனியா, பசார் வீதியில் அடி காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் இன்றிரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, பசார் வீதியில் உள்ள கடைத் தொகுதி அமைந்துள்ள பகுதியில் நகைக்கடை ஒன்றின் முன்பாக ஆண் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்துள்ளனர்.

இதன்போது சடலமாக மீட்கப்பட்ட ஆணின் தலை, கால் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்காயங்கள் காணப்படுகின்றன.

சம்பவம் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா நகரப்பகுதியில் நாட்டாண்மை தொழில் புரிபவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  யாழில் பொலிசாரை தாக்கிய தம்பதியினரால் பரபரப்பு!
READ MORE >>>  மசாஜ் நிலையங்களுக்கு புதிய விதிகள்
Previous articleஇன்றைய ராசிபலன் – 12/06/2022, மகர ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்
Next articleஅரச ஊழியர்கள் சம்பளமற்ற விடுமுறையில் 5 வருடங்கள் வெளிநாடு