Home வவுனியா செய்திகள் வவுனியா குருமன்காடு பகுதியில் விபத்து- இளைஞன் வைத்தியசாலையில்!

வவுனியா குருமன்காடு பகுதியில் விபத்து- இளைஞன் வைத்தியசாலையில்!

வவுனியா குருமன்காடு சந்திக்கு அருகாமையில் காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மன்னார் வீதியூடாக வவுனியா நகர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் திடீரென எதிர் பக்கம் திரும்ப முற்பட்ட போது அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்திற்குள்ளாகியதுடன், வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு காருடனும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பாவற்குளத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா போக்குவரத்து பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வவுனியா குருமன்காடு பகுதியில் விபத்து- இளைஞன் வைத்தியசாலையில்! வவுனியா குருமன்காடு பகுதியில் விபத்து- இளைஞன் வைத்தியசாலையில்! வவுனியா குருமன்காடு பகுதியில் விபத்து- இளைஞன் வைத்தியசாலையில்! வவுனியா குருமன்காடு பகுதியில் விபத்து- இளைஞன் வைத்தியசாலையில்!

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous article1000 பெண்களை சீரழித்த யோகா மாஸ்டர் சிக்கினார்!
Next articleநொச்சிமுனை பகுதியில் 162 கிலோ மஞ்சளுடன் இருவர் கைது!