Home வவுனியா செய்திகள் வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து: இளைஞன் பலி

வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து: இளைஞன் பலி

வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியதோடு மற்றையவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவமானது இன்று(04) மதியம் இடம்பெற்றுள்ளது.

ஓமந்தை பகுதியில் இருந்து வந்த பாரவூர்தி கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதோடு, அருகில் அமைந்துள்ள புதிய வர்த்தக கட்டிட தொகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியது.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் பலியாகியதோடு, மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தின் போது புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்த சாந்தசோலை மகளிர் அமைப்புக்கு சொந்தமான கடை சேதமடைந்துள்ளது. சம்பவ இடத்தில் வாகனச் சாரதிக்கும் இளைஞர்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டிருந்தது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து: இளைஞன் பலி வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து: இளைஞன் பலி வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து: இளைஞன் பலி வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து: இளைஞன் பலி

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவவுனியாவில் ஒன்பது இடங்களில் கைவரிசை!! மூன்று இளைஞர்கள் கைது
Next articleயாழில் காதலனுடன் தீவுப் பகுதிக்கு சென்ற யுவதி – போதை நிலையில் வைத்தியசாலையில் அனுமதி