வவுனியாவில் 5 வர்த்தக நிலையங்கள் தனிமைப்படுத்தலில்!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மற்றும் சுகாதார அறிவுறுத்தல்களை மீறிச் செயற்பட்டதாக பல்பொருள் அங்காடி  உட்பட 5 வியாபார நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டன.

கோவிட் பரவல் வவுனியாவில் தொடர்ந்தும் நீடித்து வரும் நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படல் மற்றும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாது செயற்படல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் வவுனியாவில் விசேட சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை ஒன்றினை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, சுகாதார அறிவுறுத்தல்களை மீறி மக்களை ஒன்று கூட்டி வியாபாரத்தில் ஈடுபட்ட வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டன.

அந்தவகையில், மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் உள்ள பிரபல பல்பொரு் அங்காடி, தர்மலிங்கம் வீதியில் இலத்திரனியல் விற்பனை நிலையம், குருமன்காடு பகுதியில் பல்பொருள் அங்காடி, ஹொரவப்பொத்தானை வீதியில் இரு வர்த்தக நிலையங்கள் என 5 வர்த்தக நிலையங்கள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டன.

Gallery Gallery Gallery Gallery Gallery

https://jaffna7.com/archives/30271

https://jaffna7.com/archives/30838

https://jaffna7.com/archives/30845

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..