Home Local news வவுனியாவில் 24 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

வவுனியாவில் 24 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

வவுனியாவில் 24 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று வெளியாகின.

அதில் பாவற்குளம் பகுதியில் ஒருவருக்கும், பொலிஸார் இருவருக்கும், மதவாச்சி பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், நெடுங்குளம் பகுதியில் ஒருவருக்கும், அம்பேபுவே பகுதியில் ஒருவருக்கும், கல்மடு பகுதியில் இருவருக்கும், கல்குண்டாமடு பகுதியில் ஐவருக்கும், கூமாங்குளம் பகுதியில் ஒருவருக்கும், நெளுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், கனகராயன்குளம் பகுதியில் நால்வருக்கும், சண்முகபுரம் பகுதியில் ஒருவருக்கும், நேரியகுளம் பகுதியில் இருவருக்கும், மெனிக்பாம் பகுதியில் ஒருவருக்கும், தோணிக்கல் பகுதியில் ஒருவருக்கும் என 24 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் 24 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

இவர்களில் 18 தொற்றாளர்கள் தங்களுக்கு கோவிட் தொற்று காணப்படலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தாமாகவே வைத்தியசாலைக்கு சென்று பிசீஆர் பரிசோதனை மேற்கொண்ட நிலையில் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை சுயதனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகொவிட் சடலங்கள் 42 ஒரே தடவையில் தகனம்; றாகம வைத்தியசாலையில் சம்பவம்.
Next articleஒட்டுத் துணி இல்லாமல் குளியல் தொட்டியில் ஆண்ட்ரியா; வைரலாகும் பிசாசு 2 பர்ஸ்ட்லுக் போஸ்டர்.