Home வவுனியா செய்திகள் வவுனியாவில் மேலும் 42 பேருக்கு கோவிட் தொற்று உறுதி: 5 பேர் உயிரிழப்பு!

வவுனியாவில் மேலும் 42 பேருக்கு கோவிட் தொற்று உறுதி: 5 பேர் உயிரிழப்பு!

வவுனியாவில் மேலும் 42 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், 5 பேர் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று காலை வெளியாகின.

வவுனியாவில் மேலும் 42 பேருக்கு கோவிட் தொற்று உறுதி: 5 பேர் உயிரிழப்பு!

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 42 பேருக்கு மேலும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.மேலும், கோவிட் தொற்று காரணமாக வவுனியாவில் நேற்றைய தினம் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

நான்காம் கட்டை பகுதியில் பெண் ஒருவரும் (வயது 86), புகையிரத நிலைய வீதியில் ஆண் ஒருவரும் (வயது 63), புதுக்குளம் பகுதியில் பெண் ஒருவரும் (வயது 61), கோயில்புதுக்குளம் பகுதியில் ஆண் ஒருவரும் (வயது 81), தாண்டிகுளம் பகுதியில் ஆண் ஒருவரும் (வயது 73) என 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

உயிரிழந்தவர்களின் சடலங்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் மேலும் 83 பேருக்கு கோவிட் தொற்று உறுதி! மூவர் மரணம்

திறந்த ஓரிரு நிமிடங்களில் அலைமோதிய கூட்டத்திற்கு காத்திருந்த ஏமாற்றம்.

வடக்கில் இம்மாதம் இதுவரை 230 பேர் கோவிட் தொற்றால் பலி!

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவரதட்சணை கொடுமையால் உடலுறவுக்கு மறுத்த கணவன்; மனைவி புகார்.
Next articleதிருமலையில்கோர விபத்து; நான்கு பேர் படுகாயம்.