Home Local news வவுனியாவில் மேலும் 41 பேருக்கு கோவிட் தொற்று – ஒருவர் மரணம்

வவுனியாவில் மேலும் 41 பேருக்கு கோவிட் தொற்று – ஒருவர் மரணம்

வவுனியாவில் மேலும் 41 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், ஒருவர் மரணமடைந்துள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று  இரவு வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் மேலும் 41 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் மேலும் 41 பேருக்கு கோவிட் தொற்று - ஒருவர் மரணம்

இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களைத் தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் கோவிட் தொற்று காரணமாக வவுனியாவில் நேற்றைய தினம் (28) ஒருவர் மரணமடைந்துள்ளார். நெளுக்குளம் பகுதியில் (வயது 64) ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

மரணமடைந்தவரின் சடலத்தைச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளைச் சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

உயர்தர வகுப்பில் பிரவேசிக்க ஆகக்குறைந்த தகுதி என்ன?

யாழில் வயோதிபத்தாய்க்கு ஏற்பட்ட பரிதாப நிலை…

உயர்தர வகுப்பில் பிரவேசிக்க ஆகக்குறைந்த தகுதி என்ன?

more news… visit here
READ MORE >>>  பிரதமர் மஹிந்தவின் தங்காலை கால்டன் வீடு முற்றுகை
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  கிளிநொச்சி சந்தையில் 10 கடைகள் உடைப்பு: பொலிஸார் தீவிர விசாரணை
READ MORE >>>  முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் வீட்டில் காயமடைந்த சிறுமி மரணம்
Previous articleதனிமைப்படுத்தல் ஊரடங்கை நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!
Next articleமட்டக்களப்பில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை