Home வவுனியா செய்திகள் வவுனியாவில் மயங்கி விழுந்தவர் மரணம்

வவுனியாவில் மயங்கி விழுந்தவர் மரணம்

வவுனியா, கற்குளம் படிவம் 3 பகுதியில் திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இன்று (27) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் மயங்கி விழுந்தவர் மரணம்

வவுனியா, கற்குளம் படிவம் 3 பகுதியில் வசிக்கும் 50 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் குறித்த நபர் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

எனினும், வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே அவர் மணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த நபருக்கு கொவிட் தொற்று உள்ளதா என பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகளையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇலங்கை வரலாற்றில் ஒரே நாளில் பதிவாகிய அதிக்கூடிய கோவிட் மரணங்கள்!
Next articleமட்டக்களப்பில் டெல்டா திரிபுடன் நோயாளர்கள் அடையாளம்