Home Accident News வவுனியாவில் கோர விபத்து; இருவர் பலி!

வவுனியாவில் கோர விபத்து; இருவர் பலி!

வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் இன்ற  இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததுடன்  மற்றுமொருவர்  படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் கோர விபத்து; இருவர் பலி!

இன்று (08) காலை இடம்பெற்ற விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கொழும்பிலிருந்து யாழ். நோக்கி சென்று கொண்டிருந்த கப் ரக வாகனம் கனகராயன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது யாழிலிருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

Gallery விபத்தில் கப் ரக வாகனத்தில் பயணித்த 50 வயதான குருநாகல் பகுதியைச் சேர்ந்த கே. திலக்குமார என்பவரே சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளதுடன், அதன் சாரதி கவலைக்கிடமான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பலனின்றி  மரணமடைந்துள்ளார்.Gallery

வைத்தியசாலையில் மரணமடைந்தவர் 31 வயதான கொழும்பு ஆமர் வீதியைச் சேர்ந்த சுப்ரமணியம் நிரூபன் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்திற்குச் சென்ற கனகராயன்குளம் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Gallery Gallery Gallery Gallery

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleதிருகோணமலை மாவட்டத்தில் கடந்த 6 நாட்களுக்குள் 28 பேர் மரணம் – 846 தொற்றாளர்கள் அடையாளம்.
Next articleகிளிநொச்சியில் கோவிட் தொற்றால் ஒருவர் உயிரிழப்பு!