Home Accident News வவுனியாவில் காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து!

வவுனியாவில் காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து!

வவுனியா குருமன்காடு சந்திக்கு அருகாமையில் காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மன்னார் வீதியூடாக வவுனியா நகர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் திடீரென எதிர் பக்கம் திரும்ப முற்பட்ட போது அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

அத்துடன், வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு காருடனும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பாவற்குளத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா போக்குவரத்து பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

Gallery Gallery

யாழில் முன்னாள் போராளி கடத்தப்பட்டு கொலை? உரிய விசாரணைக்கு சிறீதரன் வலியுறுத்து

யாழில் முன்னாள் போராளி கடத்தப்பட்டு கொலை? உரிய விசாரணைக்கு சிறீதரன் வலியுறுத்து

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து!

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழ். சுழிபுரத்தில் வாளுடன் ஒருவர் கைது!
Next article1000 பெண்களை சீரழித்த யோகா மாஸ்டர் சிக்கினார்!