வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு பெண்கள் உட்பட மூவர் கொவிட் தொற்று நோயால் நேற்று சாவடைந்துள்ளனர்.
குறித்த மூவரும் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களிற்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றயதினம் இரவு சாவடைந்துள்ளனர். குறித்தமூவரும் 75 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது,
குறித்த பெண்களில் ஒருவர் சுந்தரபுரம் பகுதியில் கொரோனா தொற்றிற்கிலக்காகி உயிரிழந்த முதியவரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது