வவுனியாவில் இளம் குடும்ப பெண் ஒருவரை காணவில்லை என அவரது தாயாரால் நேற்று (5) வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொக்குவெளி, மகாறம்பைக்குளம், அரசடி வீதியில் வசிக்கும் கண்ணன் வினிதா (22) என்பவரே காணாமல் போயுள்ளார்.
அவர் நேற்று முன்தினம் (04) மாலை 6 மணியளவில் தனது அம்மாவின் வீட்டிலிருந்து அருகாமையில் உள்ள கடைக்கு சென்றுள்ள நிலையிலேயே காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் தொடர்பில் விபரங்கள் கிடைக்கப்பெற்றால் வவுனியா பொலிசாருக்கோ அல்லது கீழ் காணப்படும் தொலைபேசி இலக்கத்துக்கோ தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறு அவரின் தாயார் தெரிவித்துள்ளார்.
தொடர்புகளுக்கு: 0765462984