வவுனியாவில் கோவிட் தொற்று 302 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் சில நேற்று இரவு வெளியாகியுள்ளன.
இதன்போது வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக கோவிட் தொற்று 302 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் நெடுங்குளம், தேக்கவத்தை, கோவில்குளம், குடியிருப்பு, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 85, 39, 99, 81 வயதுடைய நால்வரே கோவிட் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும், கோவிட் தொற்றால் மரணித்த நால்வரது உடல்களையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்யவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை வவுனியாவில் கடந்த சில நாட்களாக கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.