Home காத்தான்குடி செய்திகள் வளர்ப்பு தந்தையால் தாக்கப்பட்ட சிறுவன் மரணம்

வளர்ப்பு தந்தையால் தாக்கப்பட்ட சிறுவன் மரணம்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவற்குடா கிழக்கு பிர்தௌஸ் நகரைச் சேர்ந்த 11 வயதான சிறுவனை, வளர்ப்புத் தந்தை கடுமையாக தாக்கியதில் படு காயங்களுக்கு உள்ளான சிறுவன் மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்துள்ளான்.

சிறுவனின் வளர்ப்பு தந்தை காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது

குறித்த சிறுவனின் தாய் தனது கணவரை விவாகரத்து செய்த பின்னர் மாத்தளையைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்திருந்தார். இவர் திருமணம் செய்து ஒருவருடமாகின்றது.

இந்த தாய்க்கு முதல் திருமணத்தில் மூன்று பிள்ளைகள் உள்ளனர். தனது புதிய கணவரிடம் தனது மூன்று பிள்ளைகளில் 11 வயதுடைய ஒரு மகனை கொடுத்து விட்டு வெளிநாடு (குவைத்) சென்றுள்ளார்.

ஏனைய இரண்டு பிள்ளைகளில் ஒரு பெண் பிள்ளை விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றுமொரு மகன் முன்னாள் கணவரும் அவரது குடும்பமும் பொறுப்பேற்று வளர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் புதிய கணவர் வளர்ப்பு மகனை கர்பலாவிலுள்ள வாடகை வீடொன்றில் வைத்துக் கொண்டு அங்கிருந்து வந்த நிலையில் மிக கடுமையாக சிறுவனை தாக்கியுள்ளார்.

படுகாயங்களுக்குள்ளான சிறுவன் மயக்க மடைந்திருந்த நிலையில்(6) திங்கட்கிழமை மாலை காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிறுவன் விபத்தில் விழுந்ததாக கூறி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் போலியான முகவரியொன்றையும் கொடுத்துள்ளார்.

சிறுவனை மேலதிக சிகிச்சைக்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சிறுவனின் உடம்பில் தாக்கப்பட்ட பலத்த காயங்கள் காணப்பட்டதையடுத்து சந்தேக முற்ற வைத்தியசாலை வைத்தியர் சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு அறிவித்ததையடுத்து அங்கு விரைந்த சிறுவர் பிரிவு அதிகாரிகள் சிறுவனின் தந்தை மற்றும் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியதியதுடன் வைத்தியசாலை பொலிஸாருக்கும் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சிறுவனின் தந்தையினால் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து வளர்ப்பு தந்தை செவ்வாய்க்கிழமை(07) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவனை தாக்கியதாக கூறப்படும் கர்பலாவிலுள்ள உரிய இடத்துக்கு சென்ற காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.எம்.ரஹீம் விசாரணைகளை மேற் கொண்டார்.

சிறுவனை தாக்கியதாக வளர்ப்பு தந்தையிடம் மேற் விசாரணைகளில் இருந்து சிறுவனை தாக்கியதை அவர் ஒப்புக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்ந்து விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் சந்தேக நபரான குறித்த வளர்ப்பு தந்தையை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த சிறுவன் நடைபெற்று முடிந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 126 புள்ளிகளை பெற்றிருந்ததாகவும் குறிப்பிடுகின்றனர்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமாணவனை பாடசாலையில் சேர்ப்பதற்கு 3 லட்சம் இலஞ்சம் கேட்ட ஆசிரியர்! இலஞ்ச, ஊழல் தடுப்பு பிரிவின் பொறியில் சிக்கினார்
Next articleநண்பனுடன் மனைவி கள்ளத்தொடர்பு – இருவரின் கைகளையும் வெட்டிய கணவன்